சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்ப நாயக்கனூர் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவருக்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற இருந்த திருமணம் குறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தொலைபேசியின் மூலம் ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சமூகநலத் துறை அலுவலர்களும், காவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள திருமண வீட்டிற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் அதிகாரிகள் இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு பின் அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.