Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மாமனார்-மருமகன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாமனார்-மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் வீடுகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு கலைசெல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் தண்டுகாரனஅள்ளி, திருமல்வாடி கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த சக்திவேல், திருமல்வாடியை சேர்ந்த இவரது மாமனார் சின்னசாமி மற்றும் புதுகரம்பு கிராமத்தை சேர்ந்த குமார் ஆகியோரது வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் அவர்களது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதில் சின்னசாமி வீட்டில் இருந்து 18 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கஞ்சா விற்ற சக்திவேல், சின்னசாமி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் குமாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |