Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கு நகரில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் கொங்கு நகரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

ஆகவே தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிவகாசியிலிருந்து பட்டாசுகளை உரிய அனுமதியின்றி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பரமசிவம் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் அரச்சலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பட்டாசுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆகவே இதுபோன்று பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |