Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் தகவல்….!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்துள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ரஞ்சித்குமார் நடவடிக்கைகளை கண்காணித்து வந்து தொடர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரஞ்சித்குமார் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்து வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் காவல்துறையினர் ஜி.ஆர் பாளையம் நேதாஜி நகரில் உள்ள ரஞ்சித்குமாரின் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்த 35 பவுன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம், 10 சொத்து ஆவணங்களை போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ரஞ்சித்குமார் மற்றும் அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நகை மற்றும் பணத்தை மட்டும் திரும்பிஒப்படைத்தனர்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் ரஞ்சித்குமார் வீட்டில் இருந்த சொத்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ரஞ்சித்குமாரின் மற்றும் குடும்பத்தின் வருமானம், அனைத்து வரவு செலவுகளும் கணக்கிடப்பட்டு நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்தால் அவர் வருமானத்திற்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார் என்பது காவல்துறையினருக்கு தெரிந்துவிடும். அதன்பின் ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |