சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டையை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அன்பழகனை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அன்பழகன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.