Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்,.

வேலூர் மாவட்டத்திலுள்ள அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் இரவு நேரத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் இரவு நேரத்தில் அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தவாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தபோது எர்தாங்கல் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்ததோடு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |