சட்டவிரோதமாக ஆற்று மணலை பதுக்கி வைத்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தட்டாரவலசு பகுதியில் உள்ள பீமர தோட்டத்தில் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுதமன், பன்னீர்செல்வம் இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப்இன்ஸ்பெக்டர் அனந்தமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சப்-கலெக்டர் உத்தரவின் படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த தோட்டங்களில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 36 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் சைலஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.