சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கீழவாசலை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
அதன்பின் அவரிடம் இருந்த 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.