சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி உட்கோட்டத்தில் சில இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பார்த்திபன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, வேல்முருகன் ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனயடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 160 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.