Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக வேனில் புகையிலை பொருட்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடகாவிலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கடம்பூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் அதன் முன்னால் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்படி காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் 54 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரக்கு வேனில் வந்தவர்கள் கர்நாடக மாநிலம் காஜனூரை சேர்ந்த பட்டா, ஜல்லிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், இவர்கள் 2 பேரும் நல்லூரில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூருக்கு சரக்கு வேனில் புகையிலை பொருட்களை கடத்திச் சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காட்டூரை சேர்ந்த பிரகாஷ், முத்துக்குமார் என்பதும், இவர்கள் புகையிலைப் பொருட்களை வாங்குவதற்காக சரக்கு வேன் முன்னாடி சென்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள், வேன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்

Categories

Tech |