லாரியில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சேரி பகுதியில் லாரியின் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் மற்றும் வருவாய் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியின்போது ஒரு நிலத்தில் கோழிப் பண்ணை அருகில் அங்கு ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த லாரியில் சோதனை மேற்கொண்டதில்183 மூட்டையில் 8 டன் அரிசி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் லாரியை ரேஷன் அரிசி மூட்டையுடன் பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தாசில்தார் கோடிஸ்வரன் மற்றும் அதிகாரிகள் லாரிதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் கொடுமை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.