Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பிச்சென்ற டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு 50க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது காவல்துறையினர் ஒவ்வொரு லாரிகளிலும் சோதனை செய்துள்ளனர். அதில் இரண்டு லாரிகளில் மட்டும் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததைக் கண்டு அதை பிரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அதிலிருந்த 248 குட்கா மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற லாரியின் டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்ற டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |