Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுவடவள்ளி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் தனிப்படை காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்தின்படி மலர்க்கொடி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் அரிசி மூட்டையில் சாராய பாட்டில்கள் மறைத்து வைத்திருந்ததையும், குப்பைமேட்டில் சாராய ஊறல் இருந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சாராயம் மற்றும் 25 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடி, அவருடைய கணவரின் தம்பி மகேந்திரன், அக்காள் மகன் கனகராஜ் போன்றோர் சேர்ந்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சி திருட்டுத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மலர்க்கொடி, மகேந்திரன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கனகராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |