Categories
உலக செய்திகள்

“காணாமல் போன குழந்தை!”.. வனதேவதைக்கு உயிர்பலி கொடுக்க கடத்தி சென்ற நபர்.. தாய்லாந்தில் பரபரப்பு..!!

தாய்லாந்தில் காணாமல் போன ஒரு வயது குழந்தை மூன்று நாட்கள் கழித்து ஒரு குகையில் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தாய்லாந்தில் உள்ள Chiang Mai என்ற கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய நேரத்தில், வீட்டிற்கு வெளியில் Pornsiri Wongsilarung என்ற ஒரு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனது. எனவே குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்பு, சுமார் 200 காவல்துறையினர், மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து, வீடுகள் மற்றும் காட்டுபகுதிகளில் தீவிரமாக தேடினர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன் விமானங்களும் வரவழைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன குழந்தையின் தந்தையுடைய, நண்பர் Siew என்பவரை சந்தேகத்தின் பேரில், கடந்த திங்கட்கிழமை அன்று காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தையை கடத்தி, வனதேவதைக்கு உயிர் பலி கொடுப்பதற்காக, இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு குகையில் மறைத்து வைத்திருப்பதாக  கூறினார். அதன் பின்பு, மீட்பு படையினரும், காவல்துறையினரும் அந்த குகை இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்று, நேற்று குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

குழந்தையின் உடல் முழுவதும், பூச்சிகள் கடித்த காயங்கள் இருந்துள்ளது. எனவே, குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை கடத்திச் சென்ற அந்த நபர், “என்னிடம் வனதேவதை உயிர்ப்பலி தருமாறு கேட்டது. அதற்காகத்தான் நண்பரின் குழந்தையை கடத்திச் சென்றேன். ஆனால் குழந்தையை நான் ஒன்றும் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |