Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்… 2 பேரையும் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருச்சியில் இருந்து விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 இளைஞர்களையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |