Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடத்தி செல்லப்பட்ட சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தொழிலாளி போக்சோவில் கைது…!!

16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்ற கோழிப்பண்ணை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வள்ளியப்பம்பட்டி காலனியில் பிரகாஷ்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் முட்டை சேகரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 4ஆம் தேதி 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் பிரகாஷ் மற்றும் கடத்தி செல்லப்பட்ட சிறுமி நின்றுகொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து வேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற பிரகாஷை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |