Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொகுசு காரிலும் கடத்தலா… தப்பியோடிய 3 பேர்… 40 மூட்டைகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை  கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் காரை சோதனை செய்ததில் அனுமதியின்றி கடத்தி வந்த மணல் மூட்டைகள் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்தது மண்டல மாணிக்கம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(26), திருமூர்த்தி(28), கணேசன்(24) என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிக்கிய சொகுசு காரையும் அதில் இருந்த 40 மணல்மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |