Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்க மகளை காணும்…. பள்ளி மாணவி கடத்தி திருமணம்…. போக்சோவில் கைதான வாலிபர்….!!

பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் இருக்கும் செட்டிகுப்பம் பகுதியை சார்ந்தவர் சுரேந்தர். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த விசாரணையில் சுரேந்தர் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதன் பின்பு அவர்கள் கூட்டு ரோடு பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து பள்ளி மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |