சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கடத்தல் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் கடத்திச்சென்ற தமிழ்செல்வனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.