காதலித்து திருமணம் செய்து கொண்ட மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்பாளையத்தை சார்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் அப்பகுதியிலுள்ள டிராவல்ஸ் வைத்து நடத்துபவரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நாளடைவில் டிராவல்ஸ் உரிமையாளரின் மகளான பிரியதர்ஷினியிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதைப்பற்றி ட்ராவல்ஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததும் தன் மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தங்கள் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஒரு சில ஆவணங்கள் சரியாக இல்லாததால் திங்கட்கிழமை வருமாறு கூறியுள்ளனர். உடனே அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்த விக்னேஸ்வரனின் உறவினர் வீட்டில் தங்கி உள்ளனர். அங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டுக்குள்ளே புகுந்து பிரியதர்ஷினியை வலுக்கட்டாயமாக இழுத்து கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து விக்னேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரியதர்ஷினியின் தந்தை இதை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.