17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் நீடூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.