Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாணவனை கடத்திச் சென்று உல்லாசம்” 3 மாத கர்ப்பத்துடன் இளம்பெண் கைது… சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூர்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு கிளம்பிய சூர்யா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சூர்யாவை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூர்யா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரி விரைந்த காவல்துறையினர் சூர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அப்போது சூர்யாவுடன் ஒரு இளம் பெண்ணும் இருந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் வயது 21. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது சூர்யாவின் அழகில் மயங்கி 21 வயதான இளம் பெண் சூர்யாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

சூர்யாவை இளம் பெண் அழைத்துச் சென்ற போது சூர்யாவுக்கு 18 வயது முடிவடையாமல் இருந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் இளம்பெண்ணின் மீது மாணவனை கடத்திச் சென்றது மற்றும் அவருடன் உல்லாசமாக இருந்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இளம்பெண் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்ததால், மாணவன் மற்றும் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |