Categories
உலக செய்திகள்

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட பெண்…. 2-ஆவது மனைவி செய்த செயல்…. அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவில் முதல் மனைவி என்றும் பாராமல் இரண்டாவது மனைவி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜிம் மைலன் மற்றும் மெர்தே என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் விவாகரத்து செய்துள்ளார்கள். இருப்பினும் குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஜிம்மிற்கு டெப்பி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 3 பேரும் தொடர்ந்து நண்பர்களாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுள்ளார்.

இதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மெர்தேவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் உயிர் பறிபோய் விடும் என்று கூறியுள்ளனர். இதனால் இரண்டாவது மனைவியான டெப்பி முதல் மனைவியான மெர்தேவுக்கு சிறுநீரகம் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார். அதன்பின் அறுவை சிகிச்சையும் முறையாக நடந்து தற்போது மெர்தே பூரணமாக குணமடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இரண்டாவது மனைவி டெப்பி கூறுகையில் “என்னுடைய சகோதரருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சையின் போது மெர்தே தன்னுடைய நுரையீரலை கொடுப்பதற்கு முன்வந்தார். ஆனால் அது பொருந்தவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு நான் தற்போது சிறுநீரகத்தை கொடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |