தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது என்பது பொதுவான ஒன்றாகி விட்டது. இது முதலில் வயிற்று வலியால் தான் ஆரம்பம் மாகும், பின்னர் சிறுநீர் கழிக்கும் போது நிறம் மாற்றத்தை உணர்லாம். படிப்படியாக வலி அதிமாகி எரிச்சல் உண்டாகக் கூடும்.
தண்ணீர் குறைபாடே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் மசாலா அதிகம் சேர்ந்த உணவுகள் போன்றவற்றாலும் இப்பிரச்சனை உருவாகலாம். ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி விட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இது போன்ற பாதிப்புகளை உண்டாக்க கூடிய இந்த நோயை புறக்கணிக்காதீர்கள். இது குறித்த சந்தேகம் ஏதேனும் இருந்தால் மருத்துவரை அணுகலாம்