Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தைகள் பார்க்க கூடாது”… இவரை வெளியேற்றுங்கள்… இசையமைப்பாளர் அதிரடி..!!

பிக்பாஸில் பாலாஜி என்பவரை கமல்ஹாசன் வெளியே அனுப்ப வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் ஷோ என்றாலே காதல், மோதல், சண்டை என அனைத்தும் இருக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் போர் துவங்கிய நாளில் இருந்து சண்டை மட்டும் தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர். இதில் ஆரி பாலாஜியுடன் சண்டை போடுவதும், பாலாஜி ஆரி உடன் சண்டை போடுவதும் பிக்பாஸ் தொடக்க நாளில் இருந்தே நடந்து வருகின்றது. இந்நிலையில் பாலாஜியை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தாக்கிப் பேசியுள்ளார்.

ஆரி இடத்தில் இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ தோற்றுப் போய் இருப்பேன் பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜி போன்ற ஒரு போட்டியாளர் இருக்கும் போது குழந்தைகள் பிக்பாஸில் பார்க்கக் கூடாது என கூறியுள்ளார். கமல் ஹாசன் அடிக்கடி அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய ஷோ என்று கூறுவர். ஆனால் உண்மையில் இது ஏ சர்டிபிகேட் கொடுத்து 18 வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று தெளிவாக கூற வேண்டும். இந்த சோ அனைவரும் பார்ப்பதால் வயலன்ஸ் அதிகமாக இருப்பதன் காரணமாக இதனை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று விமர்சித்துள்ளனர்.

Categories

Tech |