Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்கள் மோதல்…. தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர்….சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்….!!!

சாத் நாட்டில் ராணுவ அதிகாரியாக இருந்து அதிபராக உயர்ந்தவர் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.

ஆப்பிரிக்காவில் உள்ள சாத் என்ற நாட்டில் இத்ரிஸ் டெபி இட்னோ 68 என்பவர் 30 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார். அப்போது அங்கு கிளர்ச்சியாளர்களுடன் கடும் மோதல்  ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்துவதற்கு சென்றிருந்த போது அந்தப் போர்க்களத்தில் வன்முறை முற்றி இவரையும் கொன்றுவிட்டார்கள்.

மேலும் அதிபர் பதவியை வெற்றி பெற்று விட்டார் என்ற தகவலை அதிகாரிகள் அறிவித்த சிலமணி நேரத்திலேயே அதிபர்  கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 6 ஆண்டுகள் பதவி வைக்கவேண்டியவர் போர்க்களத்தில் கொல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆகையால் தற்போது அதிபர் பதவியில் அடுத்த 18 மாதங்களுக்கு இவரது மகன் மகாமத் இத்ரிஸ் டெபி இட்னோ (38) தலைமையிலான ஆட்சி நடைபெறும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இவரின் எதிர்பாராத இறப்பினால் நாடாளுமன்றமும் கலைக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர்க்களத்தில் கொல்லப்பட்ட இத்ரிஸ் டெபி இட்னோ  ராணுவ அதிகாரியாக இருந்து அதிபராக உயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Categories

Tech |