Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு …..!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும்  ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

கீழடியில் ஆறாம்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் விரிவான முறையில் நடைபெற்று வருகிறது. ஐந்துக்கட்ட அகழ்வாராய்ச்சியில் தொடர்ச்சியை கண்டறியும் வகையில், ஆறாம்கட்ட  அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்த திட்டமிடப்பட்டு கீழடி, கொந்தகை, அகரம் , மணலூர், ஆகிய நான்கு இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொந்தகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இன்று மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட எலும்பு கூடு எத்தனை ஆண்டுகள் பழமையான மனிதருடைய எலும்புக்கூடு என்பது குறித்து  மரபணுச் சோதனைக்குப் பிறகே தெரியவரும் என்று தொல்லியர் துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |