மேற்கு வங்கத்தில் வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
பா ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசினார். அப்போது, மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜிக்கு 2010 இதில் வாய்ப்பு கொடுத்தது. இந்நிலையில் 10 வருடம் கடந்தும் அவர்களின் வாக்குறுதி வெற்றாக போனது. இதனால் மேற்கு வங்காள மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆனால் மோடி தலைமைக்கு வாய்ப்பு கொடுத்தால் ஐந்து வருடத்தில் சோனார் பங்க்ளாவாக்குவோம்.
உங்களுடைய இலக்கே மேற்கு வங்காளத்தை முன்னேற்ற வேண்டும் என்பதுதான். வெள்ள நிவாரண கொரோனா வைரஸ் வேளைகளில் கூட ஊழலில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெட்கப்படவில்லை. மேலும் அவர்கள் மம்தாவின் உறவினர்களுக்காக, அவர்களுடைய வாக்கு வங்கிக்காக, மூன்றாவது பெங்கால் மக்களுக்காக என்று மேற்கு வங்காளத்தில் 3 சட்டங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். கடந்த ஒரு வருடத்தில் 100 பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்காளம் அரசியல் தலைவர்கள் கொலைகளில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அமித்ஷா கூறியுள்ளார்.