தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா தான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தொடர்பான தகவலை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி தமிழ் திரையுலகில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கால்பதித்த ராஷ்மிகா மந்தனாவிற்கு இளம் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள். மேலும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து பல பதிவுகளை செய்து வருவார்.
இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 20 மில்லியன் Followers உள்ளார்கள். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தான் முதன் முதலாக திரையரங்கில் பார்த்த படம் தொடர்பான தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது அவர் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தை தான் முதன் முதலாக திரையரங்கில் சென்று பார்த்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.