மாமனார் ஒருவர் தனது மருமகளை கொன்று பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பகுதியில் வசிப்பவர் பங்கஜ்(55). இவருடைய மகன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் பங்கஜ்க்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் நந்தினியின் நடத்தையில் பங்கஜ் சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பங்கஜ் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த போது தனியாக இருந்த மருமகள் நந்தினியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து தன்னுடைய இரு நண்பர்கள் உதவியுடன் தூங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மருமகளை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மருமகளின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் வைத்து சுற்றி கட்டி கடற்கரை பகுதியில் தூக்கி போட்டுள்ளார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் பங்கஜ்ஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.