மும்பையில் ஒரு இளைஞன் தனது மனைவியை யூடியூபில் வீடியோ பார்த்து அதன்படி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள விரார் கிழக்கில் கோப்சர்பாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் 35 வயதான அஜய் ஹர்பஜன்சிங். இவருடைய மனைவி ரூபி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ரூபி ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரது கணவரை விட்டுவிட்டு அஜய் ஹர்பஜன் சிங்கை திருமணம் செய்து வாழ்ந்து கொண்டு வருகிறார். அஜய்க்கும், ரூபிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஏனெனில் ரூபியின் உறவு பெண் ஒருவரை அஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டார். பின்னர் ரூபி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.
பிறகு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே மனைவியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து யூட்யூபில் மனைவியை கொலை செய்வது எப்படி என்று பார்த்து அதன்படி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார். அதற்கு மறுநாள் ரூபியின் சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூபி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரது மனைவியை யூடியூப் பார்த்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.