Categories
மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் கொரோனோவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது.  இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

கொரோனா தொற்று அதிகமாக உள்ள நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து பலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டி மருத்துவர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பார்கள் என  கூறப்பட்டுள்ளது

Categories

Tech |