Categories
உலக செய்திகள்

ஆமாம்…! ஏதோ ஆகிவிட்டது…. ”கிம் ஜாங் உன்னுக்கு சிகிச்சை”- உறுதியான தகவல் …!!

நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையில் கிம் ஜாங் உன் சிகிச்சை பெற்று வருகிறார் என வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

வடகொரிய தலைவரான கிம் ஜாங் அவரது குடும்பத்திற்கு என கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என டெய்லி என் கே என்னும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் தெரிவிக்கப்பட்ட இந்த தகவலுக்கு தென் கொரியாவும் சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஹியாங் சான் நகரில் இருக்கும் இந்த மருத்துவமனை இதயம் தொடர்பான நோய்களுக்கு என்று சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மருத்துவமனை.

தலைநகர் பியோங்யாங்கிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹியாங் சான் நகரில்  இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. வடகொரியாவின் தந்தை கிம் இல் சங் இறந்த பின்பு 1994 ஆம் வருடம் கட்டப்பட்டது. அந்த பகுதியில் ஒரு மருத்துவமனை இருந்திருந்தால் கிம் இல் சங்கை காப்பாற்றியிருக்க முடியும் என்று கிம் நம்பினார்.

கிம் உடல் பருமன், அதிக புகைப்பிடித்தல் மற்றும் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்தவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற இருதய நிபுணர் ஆவார். அந்த மருத்துவரும் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் உபகரணங்கள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |