Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் இறந்து விட்டதாக தகவல் பரவியது ஏன்?… இதோ இந்த 3 காரணம் தான்!

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு மூன்று காரணங்கள் உள்ளது என நிபுணர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர்.

சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில தினங்களாக அனைவராலும் பேசப்பட்ட தலைவர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். ஏப்ரல் 11 அன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன்பிறகு எந்த விழாவிலும் பங்கேற்காமல் வெளியில் எங்கேயும் தென்படாமல் இருந்துள்ளார்.

இதனால் வடகொரியா தலைவர் கிம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன்பின்னர் அவர் உடல்நிலை மிகவும் மோசமானதாகவும், கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், ஏன் அவர் இறந்து விட்டதாகவும் கூட பல செய்திகள் பரவி வந்தன. இடையிடையே கிம் உயிருடன் இருப்பதாகவும், கட்டுமான தொழிலாளர்களுக்கு கடிதம் எழுதியதாகவும், அவர் கைப்பட அரசாணை பிறப்பதாகவும் செய்திகள் வந்து அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபித்தன.

கிம்  இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு சொல்லப்பட்ட  மூன்று காரணங்கள் 

  1.  ஏப்ரல் 15 நடைபெற்ற கிம்மின்  தாத்தாவும் வடகொரியாவின் தலைவருமான சங்கின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்தது, இதுவரை ஒரு முறை கூட தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவை தவறவிடாதவர் , இந்த முறை கலந்து கொள்ளாதது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
  2. அமெரிக்க நிதிஉதவிபெறும் டெய்லி என் கே செய்தி நிறுவனம் தொடர்பான நம்பகமான செய்திகளை வெளியிட்டு வருவது வழக்கம். சமீபத்தில் அந்நிறுவனம் வடகொரியா தலைவர் கிம் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்து கொண்டிருப்பதாகவும், செய்தி வெளியிட்டது.
  3. என் கே செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு மற்ற செய்தி நிறுவனங்கள் புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிட்டு உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் இறந்து விட்டதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வடகொரியாவில் இருந்தே பரப்பப்பட்டதாக  கூறப்படுகின்றது. வடகொரியாவில் வதந்திகளை பரப்புவதற்கு சில இடங்கள் தனிப்பட்டமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. கடந்த காலங்களில் வட கொரியாவின் தலைவர் குறித்த வதந்திகள் பரப்புவதற்கு அந்நாட்டின் அந்நிய வர்த்தகத்துறை காரணமாக இருந்ததாக கருதப்பட்டுள்ளது.

The secretive office 39 என அழைக்கப்படும் அந்தத் துறை வடகொரியாவின் தலைவர்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பணம் போன்றவற்றை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர பயன்படுகிறது. அங்கிருந்தே ஏராளமான தகவல்கள் கசிந்து உள்ளதாக கூறப்பட்டது. அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் முதலில் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஊடகங்களுக்கு தான் சென்றடையும். இருப்பினும் வெளிவந்த தகவல்கள் அனைத்தும் வதந்திகளாக மட்டுமே இதுவரை இருந்துள்ளது.

Categories

Tech |