Categories
உலக செய்திகள்

பலவீனமா இருக்காரு.. எழுந்து நடக்க முடியாது… பரிதாப நிலையில் கிம்.. முன்னாள் அதிகாரி சொன்ன தகவல்!

வட கொரிய அதிபர் கிம்மால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது என முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் அவர் பலவீனமாக இருப்பதே என வடகொரியாவின் முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை என்று கூறும் தா யோங் ஹோ அவர் மிகவும் பலவீனமாக இருப்பதாலேயே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றார்.

கிம் குறித்த உறுதியான தகவல்கள் அவரது நெருங்கிய சில அதிகாரிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தெரிய வாய்ப்புகள் இருப்பதாக தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். வட கொரியாவின் தலைநகரான பியோங்கியங்கில்  கடந்த 11 ஆம் தேதி கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் கிம் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

இதனால் கிம் ஜாங் இறந்து விட்டதாகவும் அவருக்கு இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதனிடையே அமெரிக்காவும் தென் கொரியாவும் அவர்களுக்கு கிம் இருக்குமிடம் தெரியும் எனவும் ஆனால் இப்போது அதனை வெளியிடுவது முறையானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

கிம் ஜாங் உன் வடகொரியாவின் தலைவர் மட்டுமல்ல அவர் வடகொரியாவின் தந்தையாக போற்றப்படுபவரின்  பேரன் தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தை வெகுநாட்கள் மறைக்கவும் முடியாது எனக் கூறியவர் வான்சன் நகரில் கிம் பயன்படுத்தும் சொகுசு ரயில் காணப்படுவது ஒரு கண்துடைப்பு வேலையாகக் கூட இருக்கலாம் என சந்தேகத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |