வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அமெரிக்கா புரளியை கிளப்பி விட்டிருக்கலாம் என சர்வதேச உளவு துறை நிபுணர்கள் கூறுகின்றனர்
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டு தென் கொரிய ஊடகம் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. ஆனால் தற்போது மோசமாக இருப்பதாக கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவல் அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
ஏப்ரல் 11ஆம் தேதி ஆளும் கட்சி தொழிலாளர் கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கிம் ஜாங் 15ஆம் தேதி வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படும் கிம் இல் சங்கின் பிறந்தநாளை நினைத்துப் பார்க்காமல் 12ஆம் தேதி எவ்வாறு அறுவை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்வார் என கேள்வி எழுப்பி உள்ளனர் நிபுணர்கள்.
இந்நிலையில் தென்கொரியாவின் செய்தி நிறுவனம் கிம் ஜாங் உடல்நிலை தொடர்பில் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் செய்தி நிறுவனமும் கிம் ஜாங்க்கு எந்த உடல்நிலை பிரச்சினையுமில்லை. அவர் விரைவில் மீண்டு வந்துவிடுவார் அதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வலையில் சிக்காத தலைவரான கிம் ஜாங்கை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
11ஆம் தேதி கட்சி கூட்டத்திற்கு வந்து திடீரென எங்கு சென்றார் என்று அமெரிக்கா குழப்பத்தில் இருப்பதாகவும் சீனா போன்ற நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார் என்ற குழப்பத்திலும் அமெரிக்கா இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறினால் தனக்கு ஒன்றுமில்லை என அவர் வெளியில் வந்து விடுவார் என்ற காரணத்திற்காக அமெரிக்கா இத்தகைய தகவலை பரப்பியதாக உளவுத்துறை வல்லுநர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனிடையே கிம் ஜாங் உடல்நிலை மோசமானதாக வெளியான தகவலை தென்கொரியா மறுத்துள்ளது. சீனாவும் கிம் ஜாங் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது