Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாட்டுடனான எந்த மோதலுக்கும் தயார்… வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்…!!!

வடகொரியா நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடன் எந்த விதமான ராணுவ தாக்குதல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

நேற்று கொரியப் போர் நிறுத்தத்தின் 69 ஆம் வருட நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதில்  பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டுடனான மோதல் தான் தங்கள் நாட்டிற்கு அணுசக்தி ஆபத்தை கொண்டு வந்தது என்றார்.

மேலும், எந்த நெருக்கடியையும் சமாளிக்க தங்களது ஆயுதப்படைகள் முழுவதுமாக தயாராக இருக்கின்றன. எங்கள் நாட்டின் அணுசக்தி போர் தடுப்பின் மூலம் முழு பலத்தை துல்லியமாக மற்றும் உடனடியாக அணி திரட்ட தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |