ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது.
வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினும் இன்று ரஷ்யாவில் சந்தித்து பேசியுள்ளனர். முன்னதாக ரஷ்யாவில் உள்ள பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் வந்தடைந்த கிம் ஜாங் உன்னுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்யா மற்றும் வடகொரியா தலைவர்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து பேசுவது குறிப்பிடத்தக்கது.