Categories
உலக செய்திகள்

“கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி”… அதிபர் கிம் வெளியிட்டுள்ள செய்தி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 கட்சி கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் உர தொழிற்சாலை ஒன்றை திறப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தார் கிம். தொழிற்சாலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி அனைத்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைந்தது.

இந்நிலையில் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு அதிபர் கிம் நன்றி தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார். அதன்படி கட்சியின் கொள்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்தவும், தொழிலாளர்களை வழிநடத்தவும் தங்களது பங்களிப்பை நிறைவேற்றி பொறுப்புடன் முன்மாதிரியாக இருந்ததற்கு கொள்கை பரப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது ஒர்க்கேர்ஸ் பார்ட்டி ஆப் கொரியாவின் நாளேடான ரோடோங் சின்முன் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |