இருபது நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது
உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்படைந்து திணறி வரும் சூழலில் அணுஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 20 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாகவும் கோமாவிற்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உர தொழிற்சாலை திறப்பு விழாவில் பங்கேற்று கொண்டார் கிம் ஜாங் உன்.
தொழிற்சாலை திறப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஊடகங்கள் வெளியிட்டது. பலரும் புகைப்படங்களை வைத்து பகுப்பாய்வு செய்ய தொடங்கினர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளிடையே மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் டோரி எம்.பி லூயிஸ் மென்ஞ் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பொது இருக்கும்கிம்மின் பற்களும் இதற்கு முன்னர் உள்ள கிம் புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வேறுமாதிரி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையில் வெளியிட்ட பழைய புகைப்படத்தில் இருக்கும் பற்களும் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தற்போதைய கிம்மின் புகைப்படத்தில் இருக்கும் பற்களும் வித்தியாசமாக இருந்தன.
அது மட்டுமல்லாது முன்பு இருந்ததை விட இப்போது அதிக சதை போட்ட கன்னங்களுடன் இருக்கின்றார். இதற்கு அவரது உணவு பழக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணப்படுகின்றது. அதோடு இப்போது இருக்கும் கிம்மின் காதுக்கும் முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் கிம்மின் காதுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக செயல்படும் ஜெனிபர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி கிம்மிடம் நாம் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள் என குறிப்பிட்டு தலைமுடி, பல், காது மற்றும் அவரது சகோதரி என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏவுகணை சோதனைக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் கிம் போன்று தோற்றமளிக்கும் ஒரு நபர் ஒன்று போல் ஆடை அணிந்துள்ளார். முடி வெட்டும் கூட கிம்முடன் ஒத்துப் போவதாகவே அமைந்திருந்தது. இதனால் தன்னை போன்று தோற்றமளிக்கும் நபரை தனது இடத்தில் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் பலம் பெற்றுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் நாடு வடகொரியா. அணு ஆயுத சோதனை செய்ய வேண்டாம் என பல நாடுகள் கூறியபோதும் தன் பலத்தை நிரூபிக்க மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது
அதன் பின்னர் வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையின் காரணமாக அணு ஆயுத சோதனையை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகும் அமெரிக்கா பொருளாதார தடையை அகற்றாத காரணத்தினால் மீண்டும் தனது நாட்டில் அணு ஆயுத சோதனையை அவ்வப்பொழுது நடத்திவந்தார். இதனால் பல நாடுகளை வட கொரிய அதிபர் வைத்துக்கொண்டார் என்றும் உள்நாட்டிலேயே அவருக்கு பல எதிரிகள் இருக்கக் கூடும் என்றும் நம்பப்படுகின்றது.
இதன்காரணமாக கண்ணுக்கு தெரியாத எதிரிகள், துரோகிகள் மூலம் தனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க தன்னைப் போன்றே தோற்றமளிக்கும் நபரை பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகமும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. சதாம் உசேன், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் பலர் தன்னை போன்று தோற்றமளிக்கும் நபர்களை பயன்படுத்தியதாக கோட்பாடுகள் நம்புகின்றன. தற்போதும் அதே பாணியை கிம் ஜாங் உன் பயன்படுத்தி இருக்கலாம் என்ற எண்ணம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது