கிம் ஜாங் சுற்றுலா திட்டத்தில் பணிபுரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வந்த நிலையில் அதனை பொய்யென்று நிரூபிக்க வடகொரியா பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.
வடகொரியாவின் அந்த செய்தியில் “கிம் ஜாங் தனிப்பட்ட முறையில் வான்சன் நகரில் கடலோர ரெசார்ட்டில் சுற்றுலா திட்டத்தில் பணி புரிந்துவரும் கட்டிட தொழிலாளிகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடிதத்தை கிம் அனுப்பினாரா இல்லை அவர் சார்பில் வேறு யாரும் அனுப்பினார்களா என்ற விபரம் சரியாக தெரிய வரவில்லை. கிம் ஜாங் இறந்துவிட்டதாக ஹாங்காங் தொலைக்காட்சி இயக்குனர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார் அதே நேரம் வடகொரியா வெளியுறவுக்கொள்கை ஆலோசகர் கிம் ஜாங் நலமாக இருப்பதாக கூறி அவர் வான்சன் நகரில் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து தங்கியிருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.