தென் கொரியா மீது ராணுவம் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக வட கொரிய அதிபர் கிம் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னும் வடகொரியாவின் அரசும் எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. அதனை பயன்படுத்தி ராணுவ தளபதிக்கு தென் கொரியா மீது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நாட்டு மக்களின் கோபத்தை குறைக்க ராணுவம் கண்டிப்பாக நடவடிக்கைகளை நிறைவேற்றும்.
விரைவில் கெய்சோங்கில் இருக்கும் தொடர்பு அலுவலகம் அழிக்கப்படுவதை தென் கொரியா காணும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த பகிரங்க எச்சரிக்கை அவருக்கு வடகொரிய அரசியல் வட்டாரத்தில் இருக்கும் அதிகாரத்தை உணர்த்துவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் கிம்முக்கு நெருக்கமான இவர் அந்நாட்டில் சக்தி வாய்ந்த நபரில் ஒருவராக பார்க்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.