கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய திணறிய தொழிலாளியை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி திருமணி பகுதியில் அமர்நாத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இரவில் குடும்ப தகராறு ஏற்பட்டு அமர்நாத் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் இருந்த 70 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராமல் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் காரணத்தினால் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். ஆனால் யாரும் அங்கு வராததால் தான் அணிந்திருந்த லுங்கியை கிணற்றில் இருந்த குழாயில் கட்டி இரவு முழுவதும் அங்கேயே இருந்துள்ளார்.
அதன்பின் மறுநாள் காலையில் அமர்நாத் மீண்டும் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அமர்நாத் கிணற்றுக்குள் விழுந்து வர முடியாமல் திணறி இருப்பதை கண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கயிறு கட்டி அமர்நாத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அதன்பின் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டில் ஒப்படைத்தனர்.