பெயிண்டரை அடித்துக் கொன்று அவருடைய உடலை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் தொண்டராக வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பாண்டியன் திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு பாண்டியன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் பாண்டியன் அடித்துக் கொலை செய்து உடல் கிணற்றில் வீசப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் பாண்டியனின் சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாண்டியன் அடிக்கடி மது போதையில் வீட்டில் தகராறு செய்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பரவாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டியனின் மனைவி மகேஸ்வரி மற்றும் மாமனார் கோவிந்தராஜ் போன்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.