கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் வியாபாரி கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை யாதவ தெருவில் அரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அரங்கநாதன் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் கிணற்றில் அரங்கநாதன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய கால், கைகள் கயிற்றால் கட்டப்பட்டும், சட்டை பாக்கெட்டில் எலி மருந்தும் இருந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரங்கநாதன் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அரங்கநாதனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனால் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் இவர் கடன் பாக்கி வசூல் செய்ய சென்ற போது அடித்து கால், கைகளை வயரால் கட்டி கிணற்றில் போட்டு விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். மேலும் இந்த வழக்கை சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.