Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என்னை திட்டினா நான் குதிச்சுடுவேன்”… குடிபோதையில்… புது மாப்பிள்ளையின் விபரீத முடிவு..!!

கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ரகுராம் கடந்த ஆகஸ்ட் மாதம் நர்மதா என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். ரகுராமிற்கு மது குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் ரகுராமிற்கும் நர்மதாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலையில் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ரகுராம் மீண்டும்  தகராறு செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாயார் ரகுராமிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தினருடன் ரகுராம் வாக்குவாதம்  செய்துள்ளார் . பின்னர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிற்கு அருகில் நின்று கொண்டு யாராவது  என்னை திட்டினால் உள்ளே குதித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் ரகுராம்  கிணற்றில் குதித்தார். உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால்  அதற்குள் ரகுராம் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ரகுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |