Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் மிதந்த தொழிலாளி பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தொழிலாளி பிணம் மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை உடனடியாக மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இறந்து கிடந்தவர் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முருகன் வீட்டிற்கு செல்லவில்லை என்பதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் முருகன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |