மனநிலை பாதிக்கப்பட்டவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் எரகுடி ஏ.வி.ஆர்.காலனியில் வசிக்கும் 85 வயதான நாகம்மாள் என்பவர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று எரகுடியில் உள்ள தோட்டத்து கிணற்றில் அவர் சடலம் மிதப்பது தெரிய வந்தது.
காவல்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் அவரது உடலைை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து இருக்கக்கூடும் எனக் கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.