கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லா.கூடலூர் கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கிணற்றின் நீருக்குள் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வெகு நேரமாகியும் வல்லரசு வெளியே வரவில்லை.
இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குளித்து தேடிப் பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூன்று மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றி பார்த்ததில் கிணற்றுக்குள் வல்லரசு இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.