Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர்….. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள அப்பியம்பேட்டை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெயசூரியா நண்பர்கள் சிலருடன் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஜெயசூரியா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |